கொழும்பில் தலை துண்டிக்கப்பட்ட பெண் தொடர்பில்-பொலிஸாரின் அறிக்கை

கொழும்பு, டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத இளம் பெண் குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் என உறுதியாகியுள்ளது.

பெண்ணின் DNA பரிசோதனை முடிவுகளுக்கமைய இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உடலில் தலை இல்லாமையினால் விஞ்ஞான ரீதியாக அவர் யார் என்பதனை உறுதி செய்வதற்காக DNA பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

DNA பரிசோதனை பதில் அரச பகுப்பாய்வாளர் ஜயமந்த என்பவரினால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் DNA மாதிரிகள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொலை செய்யப்பட்டவர் குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என்பது உறுதியாகியுள்ளது.

பெண்ணை கொலை செய்த பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.