தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் மூன்று தங்கச் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற போர்வையிலும் தங்கச் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக யாருமற்ற இடங்களில் பயணிக்கும் போது பெண்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.