தொல்பொருளின் பெயரால் தொடரும் தொல்லைகள்

2009 மே இற்கு பின்னரான காலப்பகுதியில்ரூபவ் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கை மையப்படுத்தி ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு’ நிகழ்ச்சி நிரல் மாறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பவை தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தான்.

இலங்கையின் தொல்பொருள் உரித்துகள் தொடர்பிலான உரிய முகாமைத்துவத்தினை மேம்படுத்தல் என்ற தூர நோக்கையும், நாட்டின் தொல்பொருள் உரித்துகளை முகாமை செய்வதற்கு அனுசரணை வழங்குதல் மற்றும் முதன்மை கண்காணிப்பு நிறுவனமாக இயங்குதல் என்ற செயற்பணியும்  கொண்டது இலங்கை தொல்பொருளியல்; திணைக்களம்.

இது, போரின் பின்னரான சூழலில் வடக்குரூபவ் கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான தொன்மையான இடங்களில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்ற கரிசனையை வெளிப்படுத்தியது. அதன்படி சில இடங்களில் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

ஆனால், இக்காலப்பகுதியில்ரூபவ் சிங்களவர்களும்,பௌத்த தேரர்களும் வட,கிழக்கு நோக்கி படையெடுத்தார்கள். படையினர் வெகுவாக நிலைகொண்டார்கள். அங்குள்ள நிலங்களையும் புலங்களையும் அரச இயந்திரத்தின் துணையுடன் ஆக்கிரமித்தார்கள்.

வெவ்வேறுபட்ட அர்த்தங்கற்பித்தல்களைச் செய்து, புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைத்தார்கள். இச்செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட, சிங்கள, பௌத்த விரிவாக்கம் என்பதை அப்பட்டமாக சதாரண உள்ளுர் மக்கள் முதல் முழு உலகத்திற்கும் காண்பித்திருந்தது.

இதனால், இவ்வகையான ஆக்கிரமிப்பு நகர்வுகளைத் மாற்றி, வன பாதுகாப்பு திணைக்களம், மாகாவலி அபிவிருத்தி திட்டம், உட்பட இதர பல அரச நிறுவனங்கள் விரிவாக்கம், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றின் பெயரில் ‘வடிவங்களை மாற்றிய ஆக்கிரமிப்புக்களை’ செய்தார்கள் ஆனால் அண்மைய காலத்தில் எவ்விதமான விமர்சனங்களும் இல்லாது ஆக்கிரமிப்புக்களை முன்னெடுப்பதற்கான உரிய மிகச் சிறந்த தெரிவாக அவர்கள் கொண்டிருப்பது ‘தொல்பொருள்’ விடயத்தினை கையாளும் ‘தொல்பொருளியல் திணைக்களத்தையே’ ஆகும்.