புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல தனி நபர்களுக்கு-இலங்கை தடை விதித்தது

உலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பலரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இணைத்து இலங்கை அரசாங்கம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இலங்கை அரசாங்கம் கறுப்புப் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 .பிரித்தானிய தமிழர் பேரவை

2. கனேடிய தமிழர் பேரவை

3. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

4. உலக தமிழர் பேரவை

5. கனேடிய தமிழர் தேசிய அவை

6. தமிழ் இளைஞர் அமைப்பு – அவுஸ்திரேலியா

7. உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு

ஆகிய 7 அமைப்புக்களே இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் பல தனிநபர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலையும் குறித்த கறுப்புப் பட்டியலில் இலங்கை அரசாங்கம் இணைத்துள்ளது