ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவாக முன்நோக்கி கொண்டு செல்வேன்!மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவாக முன்நோக்கி கொண்டு செல்ல போவதாக அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

வலுவான இளைஞர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வருகின்றனர். உலகில் அதிகளவில் வறிய மக்கள் துயரத்திலும் துன்பத்திலும் இல்லை.

உலகில் உள்ள செல்வந்தர்களே துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றனர். பணம், குறையும் போது பிரச்சினைகள் குறையும்.

தினமும் கடன் இன்றி, மூன்று வேலை சாப்பிட்டு, சாதாரணமாக வாகனம் மற்றும் சிறிய இருப்பிடமே மனிதனுக்கு தேவைப்படுகிறது.

இதன் மூலம் சமூகத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதே மனிதனின் அவசியம். இதனைவிடுத்து செல்வந்தர்களாக வர வேண்டும் என்பது மனிதனின் ஆசையல்ல.

எதிர்கால அபிவிருத்தியை திட்டமிடும் போது நாட்டில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.