ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை தொடர்பான காரணத்தை அறிவித்து எழுத்துமூலமாக அந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் அவர் தற்போது சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.