இந்திய அமைதிப்படையால் ஈழத்துப் பெண்களுக்கு இத்தனை நெருக்கடிகளா? வெளிவரும் துயரங்கள்

இந்திய அமைதிகாக்கும் படை ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் பற்றிய பதிவுகளை அவலங்களின் அத்தியாயங்கள் என்ற தொடர் நிகழ்ச்சிகளின் ஊடாக மீட்டுப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்தியப் படையினரின் பாலியல்வதைக்கு உட்பட்டவர் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் போன்றோருக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்புக்கள் மிகவும் பாரதூரமானதாகவே இருந்தன அந்தக் காலகட்டத்தில்.

ஆரம்பத்தில் சில மணி நேரமாகவோ அல்லது ஓரிரு நாட்களாகவோ பாதிக்கப்பட்டவர் பேச முடியாமல் பிரம்பை பிடித்தவர் போன்று காணப்படுவார். தொண்டை அடைத்த நிலையில் பேச முடியாமல் தினறுவார். படிப்படியாக பிறரிடம் இருந்து ஒதுங்க ஆரம்பிப்பார்.

மிகவும் மௌனமாக நடமாட ஆரம்பிப்பார். நிறைய அழுவார். அவற்றுடன் அதிக மனச் சோர்வு ஆரம்பித்துவிடும்.

சாதாரணமாகவே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிரந்தரமான ஒரு வடுவை ஏற்படுத்துவதாக கருதப்படுவதால், சமூக வாழ்க்கை ஓட்டத்தில் அவரால் வழமை போலவே மீண்டும் பங்குபற்றமுடியாமல் போய்விடும்.

இதுபோன்ற கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், சமுதாயப் பயம் என்பனவற்றிற்கு அப்பால், அவர்களை மற்றொரு பயமும் பிடுத்துவிடும்.

அதுதான் தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் தான் கர்ப்பம் தரித்துவிடுவேனோ என்கின்ற பயம்.

இதுபோன்று, 80களின் கடைசியில் ஈழ மண்ணில் தமிழ் பெண்கள் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘அவலங்களின் அத்தியாயங்கள்’ ஒளியாவணம்: