உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் விஷேட ஆராதனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு பெறுகின்றது.

இந்த நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி மட்டக்களப்பிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விசேட அஞ்சலி மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலேயே இந்த விசேட அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் சியோன் தேவாலயத்தில் நடந்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அதில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பின் பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.