முல்லைத்தீவில் தீப் பரவல் – 3 கடைகள் முற்றாகத் தீக்கிரை

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் இடம்பெற்ற தீ பரவலில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளன.

இதையடுத்து குறித்த தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.