கொவிட்-19 தொற்று உட்பட இலங்கையின் நோய்த்தடுப்பு சேவைகள் வழங்குவதை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யுனிசெஃப் நிறுவனம் தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இன்று சுகாதார அமைச்சுக்கு கையளித்துள்ளது.
அதன்படி 500 தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை யுனிசெஃப்பின் இங்கை பிரதிநிதி திருமதி எம்மா ப்ரிகாம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா ஆகியோரால் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.