இறந்த மக்களின்நினைவு தூபியை இடித்தது ஒரு மானங்கெட்ட அரசியல் பிழைப்பு-மனோகணேசன்!

மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன் மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும் பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்
“கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி” “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க அவ்வப்போது தமிழ் முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு” என்பதை அரசின் உள்ளே இருக்கும் தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் எம்பீக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எடுத்து கூற வேண்டும்.

இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன் மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும் பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.
தெற்கில் 1971இ 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது.
இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.
ஆகவே மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல் சிங்கள முற்போக்கு சக்திகளும் பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.
அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை தமிழ் முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.