இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 923 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,380 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,269 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,065ஆக உயர்வடைந்துள்ளது.