கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தனது யூடியூப் சனலில் , அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் காணொளியை பதிவேற்றி உள்ளார்.
குறித்த இளைஞன் இரண்டு தடுப்பூசிகளும் போட்ட நிலையிலும் காய்ச்சல் , தொண்டை வலி , உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டமையினால் , தானாக சென்று பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி பி.சி.ஆர் முடிவுகள் வெளியான போது அவருக்கு தொற்று உறுதியானது. அதனை அடுத்து அவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள நிலைமைகள் தொடர்பிலான காணொளி பதிவொன்றை தனது யூடியூப் சனலில் பதிவேற்றி உள்ளார்.