திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் – அமெரிக்கா உறுதி

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் என்று அமெரிக்க வியாழக்கிழமை ரஷ்யாவிடம் கூறியுள்ளது.

இந் நிலையில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய வேண்டாம் என்ற வொஷிங்டனின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதன் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா பங்களிக்கத் தவறிவிட்டது என்றும், ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு அரசியல் தவறு செய்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறந்த வான்வெளி தொடர்பான ஒப்பந்தம் என்பது கையெழுத்திட்டவர்களுக்கு மற்ற கையொப்பமிட்டவர்களின் எல்லைகள் மீது நிராயுதபாணியான கண்காணிப்பு விமானங்களை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது.

 

மேலும் இதுபோன்ற விமானங்களுக்கான நிலைமைகளையும் ஒழுங்குபடுத்துகிறது.

1992 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.