முதல் தடுப்பூசி அதிஷ்டசாலியை அறிவித்தது ஓஹியோ அரசு

அமெரிக்காவின் ஓஹியோ மாநில அரசு கொவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் முறையிலான அதிஷ்டசாலியை தெரிவுசெய்வதற்கான போட்டி ஒன்றை  நடத்தியுள்ளது.

அந்தவகையில் சின்சினாட்டி பகுதியைச் சேர்ந்த அபிகாயில் புஜென்ஸ்கே என்பவர் முதலாவது வாரத்திற்க்கான அதிஷ்டசாலி போட்டியில் ஒரு மில்லியன் டொலரை பணப்பரிசாக பெற்றுள்ளார்.

முதலாவது தடுப்பூசி அதிஷ்டசாலி வெற்றியாளரை ஓஹியோ அரசு  அறிவித்துள்ளது.

 

அதேபோல் டேடன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் கோஸ்டெல்லோ என்ற இளைஞன் இதே அதிஷ்ட திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட முதல் கல்லூரி உதவித்தொகையை வென்றுள்ளார்.

தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவே இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக ஓஹியோ மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி ஒவ்வொரு வாரமும் நடைபெறுமென்றும் வெற்றியாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படுவார்கள் என்றும் ஓஹியோ மாநில அரசு அறிவித்துள்ளது.