பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனாவை தோற்கடிக்கலாம் – சுகாதார அமைச்சின் செயலாளர்

பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனா வைரசினை தோற்கடிக்கலாம் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பொதுமக்களுமே படைவீரர்கள் என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க பொதுமக்களின் ஆதரவுடன் வைரசினை தோற்கடிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்களை வைரசிலிருந்து பாதுகாக்கவேண்டும் வைரசினை பரப்புவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் முகக்கவசங்களை அணியவேண்டும், கைகளை கழுவவேண்டும்,சமூகவிலக்கலை பினடபற்றவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.