இலங்கையில் மேலும் 227 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,929ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (08) இதுவரை 510 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 8,285 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, 35 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.