கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையம் வரையறுக் கப்பட்ட சில கடமைகளுக்காக மாத்திரம் இன்று மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப் பட்டதைத் தொடர்ந்து தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப் பட்ட மத்திய தபால் பரிமாறல் வரையறுக்கப்பட்ட கடமை கள் சிலவற்றுக்காகத் திறப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச விரைதூதர் தபால் சேவை ( EMS Courier), வர்த்தக தபால் (Business mail), உள்ளூர் விரைதூதர் தபால் சேவை ( SL Post Courier) நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் செயற்பாட்டு அலுவல்களுக்காகத் திறக்கப்படும். பதிவுத் தபால் (Register Letters) பிரிவு தெரிவு நடவடிக்கைகளுக்காகச் செவ்வாய்க்கிழமையன்று திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் கொழும்பு மாநகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் அரசாங்க அலுவலகங்களுக்குப் பதிவு செய்யப்பட்ட தபால்களை விநியோகிக்கும் அலுவல்களை 11ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

அரசாங்கத்தின் அல்லது தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை இடல் இயந்திரம் தொடர்பான அலுவல்களை நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கக் கூடியதாக இருப்பதுடன் அதற்கான 0112 320 700 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நேரத் தைத் தெரிவு செய்து கொள்வதற்கான முன்னேற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச பணியாளர்களைப் பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகளைத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்று சந்தர்ப்பங்களில் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாம் காணப்பட்டதை அடுத்து இந்த அலுவல்களை முழுமையாக இடைநிறுத்துவதற்குக் கடந்த 05 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.