இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக மேலும் இருவர் தமது உயிரை மாய்த்த நிலையில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
களுத்துறை டிப்போவில் பணியாற்றும் சாரதி ஒருவர் கொரோனா அச்சம் காரணமாக தனது வீட்டின் முன்பாக தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று கம்பஹா ஏக்கல பிரதேசத்திலும் வயோதிப பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கம்பஹாவில் விசேட தேவையுடைய நபர் ஒருவர் தாய்க்கு கொரோனா தொற்று காரணமாக பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.