எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான பிரிட்டிஸ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையேயான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொரோனாவினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் அதனை வெற்றி கொள்வதற்கான சவால்கள் உள்ளிட்ட பல இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பேரழிவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை அரசாங்கத்திற்கு அளிக்கும் என்றும், கட்சி பேதங்களை பொருட்படுத்தாது, நவீன எதிர்க்கட்சியாக நாட்டின் மக்களுக்காக பணியாற்றுவோம் என்றும் சஜித் பிரேமதாஸ இதன்போது பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் சில குறைபாடுகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எதிர்க்கட்சியின் ஒரே நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.