ஓய்வு பெற்ற ஊழியர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைக்க தீர்மானம்

கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள் ளது.

ஏனைய சில நிறுவனங்களின் ஊழியர்களையும் கடமை களுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள தாகத் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள 14 கப்பல்களை கொழும்பு துறைமுக வளாகத் திற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் தாமதப் படுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.