பொருளாதார சவாலை வெற்றிகொள்ளும் சிறந்த திட்டம் எம்வசம் உள்ளது – சஜித் பிரேமதாஸ

நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒன்றினைந்துள்ளோம்.பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து மீள்வது சவால்மிக்கதாக காணப்பட்டாலும்,அச்சவாலை வெற்றிக் கொள்ளும் சிறந்த திட்டம் எம்வசம் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் டலஸ் அழகபெருமவுடன் ஒன்றிணைந்து விசேட ஊடக சந்திப்பினை எதிர்க்கட்சிதலைவர் நடத்தினார்.

இதன்போது கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சவால்மிக்க பயணத்தின் ஆரம்பத்தை வெற்றிக்கொண்டுள்ளோம்.

நாட்டு மக்களுக்காகவே தியாகம் செய்துள்ளேன்.தனிப்பட்ட அரசியல் வெற்றி நாட்டின் வெற்றியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சிறந்த அரச நிர்வாகம்,அரச நிர்வாகத்தில் சிவில் மக்கள் பங்குப்பற்றும் அரச சபை உருவாக்கம் ஆகியவற்றை செயற்படுத்த ஒன்றினைந்துள்ளோம்.

எமது புதிய பயணத்திற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒன்றினைந்துள்ளன.நாட்டை பாதுகாத்து,மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சகல தரப்பினரதும் பிரதான எதிர்பார்ப்பாகும்.

பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து மீள்வது சவால்மிக்கது.இருப்பனும் கட்டம் கட்டமாக சவால்களை வெற்றிக்கொள்ளும் தீர்வு எம்மிடம் உள்ளது.திட்டங்களை செயற்படுத்தும் சிறந்த தரப்பினர் எம்வசம் உள்ளார்கள்.

சிறந்த திட்டத்தை செயற்படுத்தும் சவாலை ஏற்கிறோம்.ஒருசில அரசியல்வாதிகள் எமக்கு முக்கியமல்ல முழு நாட்டு மக்களும் முக்கியம் என்பதற்காகவே ஒன்றினைந்து சவால்மிக்க பயணத்தை நோக்கி செல்லவுள்ளோம் என்றார்.