கொங்கோவில் அமைதியை உறுதிப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா வலியுறுத்தல்

அமைதி காக்கும் படையினரின் சமீபத்திய மரணத்திற்குப் பிறகு கொங்கோவில், அமைதியை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமைதிக்கான ஆணையகத்தின் செயற்பாடுகளை மேலும் திறம்பட செய்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என  ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரர் தெரிவித்தார்.

 

மோதல்களை எதிர்கொள்வதற்கான எமது முன்னோக்கு ஒரு முன்னுதாரணத்திற்கு உட்பட்டுள்ளது. எனவே மாற்று தீர்மானம், நல்லிணக்கம் மற்றும் மோதல்; தடுப்பு வரை புனரமைப்பு செயற்படப வேண்டும்.

அத்துடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் செயல்முறைகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இன்று மோதல் தடுப்பு மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் முயற்சிகளில் அமைதிக்கான ஆணையகம் மேம்பட்ட ஆதரவு மற்றும் அதிக கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.

அதன் ஆணையை நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா வலியுறுத்துகின்றது. அமைதியைக் கட்டியெழுப்பும் நோக்கங்களை முன்னெடுப்பதற்கு இது மிகவும் முக்கியமானது.

மேலும் அமைதியை கட்டியெழுப்புவதற்கான நிதியுதவியை இந்தியா மேம்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் இரண்டு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொங்கோவில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.