34 நாடுகளுக்கான செயற்கைக்கோள்களை ஏவியதில் 279 மில்லியன் டொலர் வருமானம் – இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வர்த்தக நடவடிக்கைகள் மூலம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக செயற்கைக்கோள்களை ஏவியதில் 279 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரோ 34 நாடுகளைச் சேர்ந்த 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை துருவ செயற்கைக்கோள் ஏவுகணை தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் பெறப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி வருவாய் 279 மில்லியன் டொலரகள்; ஆகும்.

சமீபத்தில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை இஸ்ரோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்;.