இலங்கை குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு கரிசனை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

இதன்போது இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் , இலங்கையின் நிதி நெருக்கடி   கவலையடையச் செய்துள்ளதாக அவர்கள்  இருவரும் கூறியதாகவும்  நெருக்கடி குறித்து  இருவரும் கவனம் செலுத்தியிருந்ததாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, வெளிநாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட்டிற்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.