4 இடங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் விசாரணை

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய 04 இடங்களில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தம்மிடம் பொலிஸார் கோரியுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக, ஜனாதிபதி மாளிகையின் பழங்காலப் பொருட்கள், கட்டடங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை விரைவில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஏனைய இடங்களிலும் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென திணைக்களம் மேலும் கூறியுள்ளது.