அஸாத் சாலியின் எஜமானியே திலினி பிரியமாலி – முன்னாள் இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் எஜமானி என முன்னாள் இராணுவ அதிகாரியும் சுதந்திர ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதை உறுதிப்படுத்தும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இந்த அறிக்கை தொடர்பில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிய அவர், தனது கூற்றின் உண்மைத்தன்மையை நிரூபிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.