ரணிலின் ஆலோசகர் பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிக்கா

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

எனினும், ஆலோசகர் பதவிக்கான கடிதம் கிடைத்த சில மணிநேரங்களில் அந்த பதவியை நிராகரித்து அதிபர் ரணிலுக்கு பதில் கடிதம் அனுப்ப முன்னாள் அதிபர் திருமதி சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் அலுவலக வசதிகளையோ அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதனை முன்னாள் அதிபர் சந்திரிகாவின் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.