ஈபிடீபிக்கு காணி கொடுத்த மணிவண்ணன்- கடும் போபத்தில் மாநகர சபை பணியாளர்கள்.

ஈபிடீபிக்கு காணி கொடுத்த மணிவண்ணன்
கடும் போபத்தில் மாநகர சபை பணியாளர்கள்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தாமான வெற்றுக்காணி கால் பரப்பை எல்லைக் காணி உரிமையாளர் சுவீகரித்து விட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்.

குறித்த காணியை சுவீகரித்தவர் ஈபிடிபி ஆதரவாளர் என்பதால் திசை திருப்பப்பட்டு மாநகரசபையில் முறையிடுமாறு பணிக்கப்பட்டது

மேற்படி சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் மாநகரசபையில் முறையிட்டு பத்துத்தடவைக்கு மேல் சென்றும் எந்த நடவடிக்கையும் மாநகரசபையினால் எடுக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்டவரின் வருகையை அவதானித்த ஆணையாளர் சம்பந்தப்பட்டவரிடம் கேள்வி எழுப்பினார் அடிக்கடி வருகிறீர்கள் என்னவிடயம் என்றார்? அதற்கு அவர்கள் சம்பவத்தைக்கூற ஆணையாளர் களப்பணியாளர்கள் குழுவிடம் ஏன் இவர்களின் பிரச்சினை தீர்கப்படவில்லை உடனேயே விசாரிக்கும்படி கூறியுள்ளார்

அதற்கமைய மறுநாள் சென்ற பணியாளர்கள் காணியை அளந்து வரைபடத்தை தருமாறு எதிராளியிடம் அறிவித்து ஒருவார கால அவகாசத்தை வழங்கினார்கள்.

சாதாரணமாக காணி அளப்பதாக இருந்தாலே எல்லைக்காரர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில்தான் அளக்கவேண்டும் இந்த சட்டம் இலங்கை சட்டப்புத்தகத்தில் உள்ளன.

ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை மாறாக ஒரு பெண் ஒருவரால் அளவுநாடாவை எதிராளியின் கையில் கொடுத்து அளந்துள்ளார் இதன்போது எதிராளி சொன்னார் மாநகரசபை ஒன்றும் புடுங்காது ,புடுங்கவும் தெரியாது

இதன் பின் பாதிக்கப்பட்டவர் சென்று அம்மா உங்களுடன் கதைக்கவேண்டும் என்று கேட்க நான் உம்மோடு கதைக்க வரவில்லை அவரின் காணி அளக்கத்தான் வந்தேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்

பாதிக்கப்பட்ட கணவனும் மனைவியும் அலுவலகத்தில் சந்திக்கும் நோக்குடன் அளவையரை பின் தொடர அளவையர் பதறியடித்து வேறுபாதைகளுக்கூடாக தப்பிச்சென்றுவிட்டார்.

இரண்டு நாட்களின் பின்னர் ஆண்அளவையர் ஒருவரின் முத்திரை பொறிக்கப்பட்டு வரைபடம் மாநகரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நடந்த அனைத்தையும் காணொளியுடன் மாநகரசபை களப்பணியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது இவர்களை சும்மா விடக்கூடாது என்று கூறிய களப்பணியாளர்கள் மேஜர் மணிவண்ணனிடம் முறைப்பாடு செய்து இரு தினங்களில் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

அதன்படி காலை 8 மணிக்கு மணிவண்ணனை சந்திக்க வந்தவர்கள் மதியம் 2.45 மணிக்கு சந்திக்க உள்ளே சென்றனர் எங்கேயோ பார்த்தபடி மூன்று நிமிடங்களில் தான் விசாரிப்பதாக மணிவண்ணன் கூறி வெளியே அனுப்பிவிட்டார்

இதனால் ஆத்திரமடைந்த களப்பணியாளர்கள் மாநகரசபை வக்கீல சந்திக்கும்படி கூறினார் அதற்கமைய அனைத்து ஆவணங்களுடனும் வக்கீல சந்தித்தனர் மறுநாள் வரும்படி கூறிய மாநகரசபை வக்கீல் இது ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் சிவில் வழக்கு போடுங்கள் என்று கூறியுள்ளார் வேதனையுடன் வெளியில் வரும்போது ஒரு பெண் பணியாளர் பக்கத்தில் வந்து இரகசியமாக சொன்னார் உங்கள் காணியை பிடித்தது மேயரின் சாரதியின் தம்பி அதனால்தான் உங்களுக்கு இஞ்ச நியாயம் கிடைக்காது நீங்கள் கச்சேரி காணிக்கந்தோருக்கு போங்கள் என்றுவிட்டு உள்ளே போய்விட்டார்