பதவியேற்று 45 நாட்களில் பதவியை இராஜிநாமா செய்வதாக பிரித்தானிய பிரதமர் திடீர் அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்கள் ஆகும் நிலையில் அவர் தற்போது தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்றையதினம் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்திருக்கிறார்.

பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.