பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் பருத்தித்துறை – நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று (25) மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

3 மாவீரா்களின் தாய் மாவீரா்களுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடா்ந்து, அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அ

தனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோா்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளா்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது