அம்பாறையில் காணாமல்போன சிறுமி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

அம்பாறை – இகினியாகல பிரதேசத்தில் 30 நாட்களுக்கும் மேலாக காணாமல்போயிருந்த 13 வயது சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் சந்தேகநபர் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் இருந்த நிலையில் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் நேற்று செய்திகள் வெளியான நிலையில் லெல்லொப்பிட்டிய பிரதேச கிராம மக்கள் வழங்கிய தகவல் பிரகாரம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரும், சிறுமியும் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நேற்று கிண்ணியாகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சந்தேகநபர் நேற்று பிற்பகல் அம்பாறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை – இகினியாகல தேவலஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் கடந்த அக்டோபர் 23ஆம் திகதி முதல் தனது 13 வயது மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இவ்வாறு வாடகை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.