அவுஸ்திரேலியாவில் ஏதிலிகளுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்க கோரி போராட்டம்

இன்று அவுஸ்ரேலியா பாராளுமன்ற முன்றாலில் தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீப்பு போராட்டத்தில் அவுஸ்ரேலிய மாகணங்கள் பலவற்றில் இருந்து கலந்துகொண்ட பல நூற்றுக்கனக்கான மக்கள் உடனடியாக ஏதிலிகளுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்களில் ஏழுவர் (7)பாராளுமன்றத்தில் விசேட அனுமதி பெற்று உள் சென்று சட்டசபை உறுப்பினர்களை சந்தித்து ஶ்ரீலாங்கவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உறுதிப்பட தெரிவித்து நாங்களே அதன் நேரடி சாட்சி என்பதை தெளிவுபடுத்தினார்கள் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என எடுத்துரைத்தார்கள்.

அவுஸ்ரேலியா கிறீன் கட்சி உறுப்பினார்களான( Australian Green Party) Senators Nick McKim and Mehreen Faruqi from the Greens Party, as well as their respective policy advisors, including the policy advisor for Greens Senate Leader David Shoebridge ஆகியோரை சந்தித்து விளக்கமளித்தனர் ,இதன்போது தமிழ்மக்களின் வலிகளை கேட்டறிந்த சட்டசபை உறுப்பினர்கள் உங்களாது வலிகளையும்& கோரிக்கைகளையும் சக சட்டமன்ற உறுப்பினார்களுக்கு தெரிவிப்பதோடு இவ்விடயத்தை உடனடியாக பாரளுமன்றம் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தனர் .எங்களுடைய இந்த வலிகளையும் வேதனைகளையும் கேட்டறிந்த அவுஸ்ரேலியா சட்டசபை உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை அமைப்பாளர்கள் தெரிவித்து கொண்டனர் .