சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் காலமானார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96 ஆவது வயதில் இன்று காலமானார்.

1989 முதல் 2004 ஆம் ஆண்டுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் 1993 முதல் 2003 வரை சீன ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஸேமின்.

1989 ஆம் ஆண்டு தியெனமென் ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஸேமின், உலக அரங்கில் வலிமையான  நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழிநடத்தினார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளூ;ர நேரப்படி இன்று பிற்பகல் 12.13 மணியளவில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.