சற்றுமுன் ஏ – 9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற அனர்த்தம்-தப்பிய பயணிகள்

கிளிநொச்சி ஏ – 9 நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற பாலை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக 6 மணியளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்து தெய்வாதீனமாக விலகியதால் பயணிகள் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

சரிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் பேருந்தின் மீதும் வீழ்ந்திருக்கின்றன. இம்மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை கரைச்சி பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

தற்போது போக்குவரத்து மீளவும் இயல்புக்கு திரும்பியுள்ளது.