மகிந்தவின் மகன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹிருணிக்கா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் இல்லையென சர்ச்சைக்குரிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

மகிந்த மீது நாமல் அன்பு இல்லாத வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்தில் நாமலை கண்ட உறுப்பினர்கள், ஹிருணிக்கா ஏன் அப்படி கூறுகின்றார். உங்களை மகிந்தவின் மகன் அல்ல தந்தை மீது அன்பில்லை என்கிறாரே ஏன் என நாமலிடம் வினவியுள்ளனர். ஆம் அவர் அவ்வாறு தான் கூறியுள்ளார்.

ஹிருணிக்கா கூறுவதனை நிரூபிக்க வேண்டும் என்றால் DNA பரிசோதனை ஒன்று தான் செய்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என நாமல் கூறியுள்ளார்.

எனினும் அவர் கூறியது மிகப்பெரிய விடயம் என்பதனால் இது தொடர்பில் ஊடகங்களிடம் கூறுமாறு நாமலிடம் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நாமல், அவரை பெரிதாக கண்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முன்னர் எனது தந்தையும் தாயும் தனது பெற்றோர் என கூறினார்.

எங்கள் குடும்பத்துடன் நெருங்கி செயற்பட்டார். அவர் எனது தங்கை போன்று ஒருவர் தான். இதனால் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.