போராட்டக்காரர்களுக்கு பிரித்தானியாவில் கடுமையான சட்ட நடவடிக்க-ரிஷி சுனக் பகிரங்க அறிவிப்பு

சட்டவிரோத போராட்டங்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத போராட்டங்களிற்கு எதிராக பொலிஸாரை பயன்படுத்தப்போவதாக சுனாக் எச்சரித்துள்ளார் .

சில சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் போராட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் ரிஷி சுனக் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்களில் ஈடுபடும் சுயநலமிக்க சிறிய குழுவினரால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டத்தை மீறுபவர்கள் அதற்கான விளைவுகளை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத போராட்டங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸாருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுனாக் கூறியுள்ளார்.