கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற இலங்கை தமிழ் பெண்! ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஒலித்த கரகோசங்கள்

இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் .

கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தனது பட்ட படிப்பைத் தொடங்கிய இவர் நவம்பர் 2 திகதி 4,000 மாணவர்களுடன் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.