சம்பந்தன் தனது கன்னத்தில் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்-சிவாஜிலிங்கம் வேண்டுகோல்

இலங்கையின் 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி கேட்ட தமிழ் தலைவர்கள், பொது இடத்தில் தமது செருப்புக்களை கழற்றி தமக்கு தாமே அடித்துக் கொள்ள வேண்டும்.

அப்போது பொன்சேகாவுடனும், ரணிலுடனும் செய்த ஒப்பந்தத்தை சம்பந்தன் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தில் பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விடும் சிறிய விடயங்கள்தான் அதிலுள்ளன.

அப்போதே சம்பந்தனிடம் கேட்டேன், இதற்கு முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் என்றா பெயர் வைக்கப் போகிறீர்கள் என தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று பருத்தித்துறையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று பாராளுமன்றத்தில் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா சொன்ன கருத்துகள் அதிர்ச்சியடையும் வேதனையடையும் வைத்துள்ளது.

இதன்மூலம் அவரது கொடூர மனநிலை வெளியாகியுள்ளது. இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்ததாக இதே இராணுவத்தளபதி கூறியிருக்கிறார்.

இனப்படுகொலை நடந்துள்ளது, போர்க்குற்றம் நடந்துள்ளது. ஐ.நா செயலாளர் நாயக்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு 40,000 மக்கள் கொல்லப்பட்டதாகவும், இன்னொரு குழு 70,000மக்கள் கொல்லப்பட்டதாகவும், கணக்கில் வராமலிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களை கொன்று விட்டு,6,000 பேர் உயிரிழந்ததாக கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும், இழிவுபடுத்தும் செயல்.

இராணுவத்தளபதி பொன்சேகாவின் கூற்றை பார்த்தால், இவர் புலிகளின் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமென மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு நிலைமையுள்ளது.

சரத் பொன்சேனாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தமைக்காக மக்கள் இன்று வெட்கி தலைகுனிகிறார்கள்.

ஆதரிக்குமாறு கேட்டவர்கள், வீதிகளில், பொதுஇடங்களில் தமது செருப்புக்களை கழற்றி தமது கன்னங்களில் அறைய வேண்டிய நிலைமையில் உள்ளது.

சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை கேட்டுக் கொண்டது. அதற்காக ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை வெளியிடுமாறு சம்பந்தன் ஐயாவை நாம் கேட்டுக் கொள்கிறோம். அவர் வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் ஒன்று பருத்தித்துறையில் இருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுமாம்.

அப்பொழுதே சம்பந்தன் ஐயாவை பார்த்து கேட்டேன்- அந்த இரயிலுக்கு முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் என்றா பெயர் என சஜித் பிரேமதாசவை ஆதரித்தமைக்காக மக்கள் வெட்கப்படுகிறார்கள்.

அவரை சரத் பிரேமதாச என்றுதான் அழைக்க வேண்டும். சரத்துக்களால்தான் தமிழர்களிற்கு பிரச்சனை.

சரத் வீரசேகர புலிகளை மட்டுமல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டுமென்கிறார். சிங்கள பேரினவாதத்திற்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சியென்ற பேதமில்லை.

2010, 2015, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் தாம் தவறிழைத்து விட்டோம் என தமிழ் மக்களை நினைக்கும்படி அந்த வேட்பாளர்கள் வைத்து விட்டார்கள் என்றார்.