யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி; பெரும் சோகத்தில் குடும்பம்!

நெல்லியடி மத்திய கல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கடுக்காய், கட்டைவேலி கரவெட்டி என்ற முகவரியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) எனும் மாணவரே என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தாய், தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் இவரும் நண்பர்களும் நுணாவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது நிலைதடுமாறிய மாணவன் லக்சன் குளத்தின் உள்ளே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதால் அவர்கள் கையை விட்டதாக தெரியவருகின்றது.

எனினும் ஆபத்தை உணர்ந்த சக நண்பர்கள் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.