அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராகும் சீனா! உளவுத்துறையின் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவேண்டும் என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளார்.

நாளிதலொன்றுக்கு ராட்கிளிஃப் எழுத்திய கட்டுரையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,

சீனாவால் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த தற்போதைய சூழலில், உலகில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனாதான் திகழும்.

அமெரிக்காவையும் உலகின் பிற நாடுகளையும் பொருளாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் ஆக்கிரமிக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு சர்வதேச திட்டங்கள், அந்த நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைமுகமான செயற்பாடுகளே ஆகும்.

‘திருடு, பிரதியெடு, இடத்தைப் பிடித்துக் கொள்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு சீனா பொருளாதார ரீதியிலான சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடி வருகிறது. பிறகு அந்தத் தொழில்நுட்பத்தைப் பிரதியெடுக்கிறது. பிரதியெடுக்கப்பட்ட அந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உலகச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அந்த நிறுவனங்களின் இடங்களை சீனா பிடித்துக் கொள்கிறது.

அமெரிக்கா ஒவ்வொரு தலைமுறை காலக்கட்டத்திலும் சந்திக்கும் சவால்களில் ஒன்றுதான் தற்போது சீனாவிடமிருந்து எழுந்துள்ள அச்சுறுத்தலும்.

அந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அமெரிக்கா சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. பாசிஸத்தைத் தோற்கடித்தது முதல் (சோவியத் யூனியனின்) இரும்புத் திரையை தகர்த்தது வரை அமெரிக்கா அனைத்து அச்சுறுத்தல்களையும் வெற்றி கொண்டுள்ளது.

இந்த வகையில், தற்போது சீனாவின் அச்சுறுத்தலையும் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே இந்தத் தலைமுறை அமெரிக்கர்களின் திறன் முடிவு செய்யப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முதல் தேசிய உளவு அமைப்பின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வரும் ராட்கிளிஃப், இன்னும் சில வாரங்களில் நாட்டின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கவுள்ள நிலையில் சீனாவுக்கு எதிரான இத்தகையக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பிடன் ஜனாதிபதியான பிறகு அவர் சீனாவுடன் நல்லுறவு ஏற்படுத்துவதை சிக்கலாக்கும் எனவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.