யாழ் போதனா வைத்தியசாலையின் விடுதிகள் நீரில் மூழ்கின

யாழ்.மாவட்டத்தில் பெய்த கனமழையினால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால் சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.