பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (Stephen Twigg) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (13.01.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்

ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு
இச்சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளார்.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.