ஆழ் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்!அம்பலமானது ரஷ்யாவின் செயல்

ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த ஆண்டு பிரித்தானிய கண்காணிப்பு விமானத்தை கருங்கடலில் சுட்டு வீழ்த்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பென்டகன் ஆவணத்தின்படி தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது Secret/Noforn ஆவணத்தின் மூலம் கசிந்துள்ளது.

இதேவேளை பென்டகன் துணை செய்தி செயலாளர் சப்ரினா,பாதுகாப்பு துறை இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது, மேலும் விசாரணைக்காக நீதித்துறைக்கு முறையான பரிந்துரையை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் பார்லிமென்ட் ஹவுஸ் ஆஃப் காமன்ஸிடம் கூறியுள்ளார்.

ஆனால் பிரித்தானிய அமைச்சர்களிடம் பேசியபோது, வாலஸ் குறித்த சம்பவத்தை அந்த வகையில் விவரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

குறித்த தகவல் வேறு விதமாக சென்றிருந்தால், நேட்டோவுடன் ஒரு பரந்த சண்டையைத் தூண்டிவிடக்கூடும். அது அமெரிக்காவை ரஷ்யாவுடன் நேரடியாக போருக்கு தள்ளியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.