யாழ். நாவாந்துறையில் பதற்றம் : பொலிஸ் விசேட அதிரடிப் படை குவிப்பு

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் மோதலுக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.

எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.