தமிழீழ விடுதலைப்புலிகளின் 12 கப்பல் மூழ்கடிப்பு.
பிரதான சந்தேக நபரை கைது செய்ய தவறிய புலிகளின் புலனாய்வு -திடுக்கிடும் சில உண்மைகள்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான பல ஆழ்கடல் வினியோக கப்பல் சிங்கள கடற்படைகளால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களோடு பிரதான சந்தேக நபரான இளங்குட்டுவன் தொடர்பில் நாம் விரிவாக பார்க்க இருக்கின்றோம்
அண்மைக்காலமாக குறித்த சந்தேக நபர் தொடர்பில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பத்தில் கடற்புறா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் பின்னர் 1991-ம் ஆண்டு கடற்ப் புலிகள் என்ற பெயரில் உருவாகி சிங்கள அரச கடற்கலங்களை மூழ்கடித்தனர்.
இறுதிவரை நடந்த பல கடற் சமர்களுக்கு தளபதி சூசை கட்டளைத்தளபதியாகவும் சிறப்பு தளபதியாகவும் செயற்பட்டார்.
ஆரம்ப காலங்களில் கடல் புலிகளின் கப்பல்கள், பிற நாடுகளுடனான வணிகத்தொடர்புக்காகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள போராளிகளைப் பயிற்சிக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், வெடிபொருட்கள், போர் தளபாடங்களைச் சேகரிப்பதற்காகவும், காயமுற்றவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை அழிப்பதற்காக, இலங்கை அரசு சர்வதேச நாடுகளில் வேலை செய்யும் புலிகளின் சிலரை தன்வசம்படுத்தி 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கடல் புலிகளின் பல கப்பல்களை அழித்தது. சில கப்பல்களை கைப்பற்றியது.
விடுதலைப் புலிகளுக்கு 2004-ம் ஆண்டு உலகளாவிய அளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வந்தவரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்தவருமான கேபி என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கேப்பி பற்பநாதனோடு 2004 ஆண்டில் இருந்து 2009 வரை வேலை செய்த திரு இளங்குட்டுவன் என்ற நபரே காரமாக இருந்தார் என கேப்பி பற்ப நாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் அண்மையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகிருந்தார் அவரிடம் எமது செய்தியாளர் வினாவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் தெரிவிக்கையில் திரு கேப்பி பற்பநாதனும் நானும் ஒன்றாக ஒரு செல்லில் இருந்தோம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம் அப்போதுதான் கேப்பி என்னிடம் குறிப்பிட்டார்
ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்காக என்னால் பயன்படுத்திய ஏ522 என்கிற ஆயுதக் கப்பல் இந்தோனேஷியாவில் இருந்தது இதை நான் ஒருபோதும் காட்டி கொடுக்கவில்லை என்னோடு கூட இருந்த இளங்குட்டுவன் என்ற போராளியே காட்டி கொடுத்தார் இன்று அவர் விடுதலையாகி வெளிநாடு சென்றுவிட்டார் ஆனால் நான் மட்டும் வெளிநாடு செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது நான் இந்த விடயத்தில் சில உண்மைகள் கூறத்தவறியதன் அடிப்படையில் நான் இங்கே இருக்கின்றேன்
அன்று நான் பயன்படுத்திய கப்பலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் இளங்குட்டுவன் இருந்தார்.
கப்பல் கடலில் எரியும் போது அந்த கப்பலில் பயணித்த போராளிகள் கருகும் போது துரையா போனோடு புதுக்குடியிருப்பில் திருமண நிகழ்வில் நின்றவர் தான் இந்த இளங்குட்டுவன்
இவ்வாறான இளங்குட்டுவன் தான் தலைவரோடு நெருக்கமாக இருந்ததாக காட்டி கொள்கின்றார்
இவர் தலைவரோடு நெருக்கமாக இருந்ததாக கூறும் இவர் தலைவரை கைநழுவ விட்டதன் பின்னணி என்ன? தலைவர் உயிரோடு இல்லை என கூறுகிறார் ஆனால் இவரின் கூற்றுப்படி தலைவர் வீரமரணம் அப்படி என்றால் தலைவரோடு நெருக்கமான இளங்குட்டுவன் எங்வாறு உயிர் தப்பினார்?
தலைவர் மீதும் எமது இயக்கம் மீதும் அதிகம் பற்றுக்கொண்ட போராளிகள் தொடக்கம் பொதுமக்கள் வரை அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்
தலைவரோடு விசுவாசமாக இருந்ததாக பொய்யான பரப்புரையை செய்துகொண்டு பல மில்லியன் ரூபாக்கு சொந்தமான புலிகள் இயக்கத்தின் ஆயுத தளபாடங்களை சிங்கள இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்து சில போராளிகளை நீண்ட கால சிங்கள சிறைக்குள் அடைத்துவிட்டு தலைவர் தொடர்பிலும் அவர் குடும்பம் தொடர்பில் உச்சரிக்க முடியாது
இதே இளங்குட்டுவன் தான் துவாரகாவின் வருகை எதிர்பதற்கு சிங்களத்துடன் கைகோத்துள்ளார் இவருக்கு பின்னால் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தும் வினாயகம்,வினாயகத்தின் மச்சாள் ஊத்தை சாந்தி, கடற் சண்டையில் இருந்து தப்பியோடிய கடற்புலி நபர்களான றூபன்,பிபர இராணுவ முகவர் குமார் மாத்தையாவின் தம்பி சதீஸ் ,மற்றும் மாத்தளனுக்கால் தப்பியோடி ஆமிக்குள் சென்ற மணாளன் உள்ளிட்ட சிங்கள அரசபடை முகவர்களால் தலைவர் மேதகு வே பிரபாகரன் குடும்பத்திற்கு எதிராக பாரிய சதி முயற்சிக்கு சிங்கள அரச புலனாய்வால் களமிறக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் மக்கள் விழிப்படைந்து இவர்களை எதிர் கொண்டு எமது இளம் சூரியனின் வருகைக்காக காத்திருப்போம்.