நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (26) நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக நிதி முறைக்கேடு , நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும், பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார் எனவும், கண்டி – கெண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.