மறுசீரமைக்கப்படவுள்ள மின்சார சபை : கஞ்சன விஜேசேகரவின் அறிவிப்பு

சிறிலங்கா மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மறுசீரமைப்பு சட்டமூலம்
இதன் போது, மறுசீரமைப்பு சட்டமூலம் மற்றும் இந்த நடவடிக்கைக்கு அபிவிருத்தி நிறுவனங்கள் வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நகரும் இலங்கை : சாலிய பீரிஸ் குற்றச்சாட்டு
சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நகரும் இலங்கை : சாலிய பீரிஸ் குற்றச்சாட்டு
அத்துடன், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள காலப்பகுதி தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி மற்றும் மின்சக்தி நிபுணர்கள், மின்சார சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://x.com/kanchana_wij/status/1722251129084629466?s=20