நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. எனினும், நாட்டின் ஏனைய பொதுவான பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவக்கூடும்.
Follow & Share




