LATEST
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது! யோஷித ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது! யோஷித ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி! ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்! நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை! செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
உள்ளூர்

நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை!

July 3, 2026 · National Tamil LK

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடைவிடாது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அத்துடன் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மழை நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›